ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான ஐ.ஓ.எஸ்.12 இனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் சான் ஜோசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.ஓ.எஸ்.-12 ஐ அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் 2013ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆப்பிள் தயாரிப்புகளில் ஐ.ஓ.எஸ்.12 இயங்கு தளத்தை பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இந்த இயங்கு தளத்தின் மூலம் ஐ போன் 6 உள்ளிட்ட செல்பேசிகளின் செயலாக்கம் மேலும் வேகம் பெறும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
இதன் சிறப்பம்சமாக 32 பேரிடம் ஒரே நேரத்தில் குரூப் வீடியோ சாட் செய்வதற்கான வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு இறுதியில் புதிய ஐ.ஓ.எஸ். இயங்குதளம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment