ஐரோப்பாவுக்குள் நுழைந்த பசுவுக்கு மரண தண்டனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

ஐரோப்பாவுக்குள் நுழைந்த பசுவுக்கு மரண தண்டனை

முறையான ஆவணம் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையை தாண்டி வந்த கர்ப்பமுற்ற பசு ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பென்கா என்று அழைக்கப்படும் இந்த பசு பல்கேரிய எல்லையோர கிராமமொன்றில் தனது மந்தையில் இருந்து அலைந்து திரிந்தபடி ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறாத செர்பிய நாட்டுக்குள் சென்று மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் புகுந்த நிலையிலேயே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான இறக்குமதி விதிகளின் கீழ் இந்த விலங்கு அழிக்கப்பட வேண்டி இருப்பதாக பல்கேரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய விதியின்படி கால்நடைகள் ஐரோப்பிய எல்லைக்குள் நுழையும்போது முறைப்படியான ஆவணங்கள் கோரப்படுகிறது. மூன்று வாரங்களில் பிரசவிக்கவுள்ள இந்த பசு தற்போது அதன் உரிமையாளரிடம் உள்ளது. 

அது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் சான்று வழங்கியபோதும் அதன் மீதான தண்டனையை நிறைவேற்றுவது குறித்து நிர்வாகம் உறுதியாக உள்ளது.

பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment