பாக்கிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் - இம்ரான் கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி மற்றும் முன்னாள் அதிபர் முஷரப் வேட்புமனுக்கள் தள்ளுபடி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

பாக்கிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் - இம்ரான் கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி மற்றும் முன்னாள் அதிபர் முஷரப் வேட்புமனுக்கள் தள்ளுபடி

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாஸி ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 25-ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இஸ்லாபாத் தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை என அவர்களது வேட்புமனுக்கள் தேர்தல் செயலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் நாளை முறையிட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் இஸ்லாமாபாத் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் முன்னாள் அதிபர் முஷாரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் நீதிமன்ற உத்தரவின் படி நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை முன்னாள் அதிபர் முஷரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டி உச்ச நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 13-ம் திகதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்திருந்தது.

ஆனால் குறிப்பிட்ட திகதியில் முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முஷரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து வழக்கை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிமன்றம், முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் அதிரடியாக திரும்ப பெற்றது.

இந்நிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முஷரப் அளித்திருந்த வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வரும் 22-ம் திகதி மேல்முறையீடு செய்ய இருப்பதாக முஷரப் தரப்பு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment