மினி சூறாவளியினால் கல்முனை மாமாங்க வித்தியாலயத்திற்கு சேதம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

மினி சூறாவளியினால் கல்முனை மாமாங்க வித்தியாலயத்திற்கு சேதம்

கல்முனைப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் பாடசாலைகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

மினி சுறாவளியினால் ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தின் தரம் நான்கு மாணவர்கள் கல்வி பயிலும் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதினால் அக்கட்டிடத்தில் இயங்கி வந்த ஐந்து வகுப்பறைகளுக்குள்ளும் மழை நீர் உட்புகுந்துள்ளது.

இதன் காரணமாக மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதில் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அதிபர் திருமதி ரவீந்திரகுமார் சுகன்யா தெரிவித்தார்.

இப்பாடசாலை தரம் ஒன்று தொடக்கம் தரம் ஒன்பது வரை இயங்கி வருகின்றது. பாடசாலை வளாகம் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளதினால் இயல்பாகவே நீர் தேங்கி நிற்கின்றது.

பல்வேறு வசதிகளற்ற நிலையில் இயங்கி வரும் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தின் குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு பலரிடம் சுட்டிக்காட்டிய போதிலும் இதுவரை எவரும் உதவ முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இதனால் திங்கட்கிழமை கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment