மலையக சமூகத்தின் தனி பெரும் அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி கட்டியெழுப்பப்பட்ட வேண்டும். அத்துடன், கூட்டு கட்சிகள் தமது குறுகிய தொழிற்சங்க நோக்கில் இருந்து விடுபட்டு அரசியல் பலத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு முன்னிற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மலையக வரலாற்றில் பல அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் அவை எந்த ஒரு நோக்கையும் எட்டாது குறுகிய காலத்தில் பிரிந்து சென்றிருக்கின்றது. இக்கூட்டணிகள் சமூக தேவையை அடிப்படையாக கொள்ளாது தமது கட்சிகளின் அரசியல் தேவையை அடிப்படையாக கொண்டே இருந்திருக்கின்றன.
ஒன்று தமது அரசியல் தேவை நிறைவேறியவுடன் கூட்டணி கழட்டி விடப்பட்டிருக்கின்றது. அல்லது கூட்டணி மூலம் தாம் நினைத்த அரசியல் தேவையை அடைய முடியாதது போனதால் கூட்டணி கழட்டிவிடப்பட்டு இருக்கின்றது. சமூக தேவைகளை அடைந்து கொள்வதற்காக எவ்வித முயற்சியும் விட்டுக்கொடுப்பும் இக்கூட்டணிகளில் காணப்படவில்லை.
அதனால் மலையக சமூகத்தின் ஒட்டு மொத்த அரசியல் பலத்தையும் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாதுபோய் இருக்கின்றது. இவ் இடைவெளியை நிரப்ப மலையக சமூகத்தின் தனி பெரும் அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி கட்டியெழுப்பப்பட்ட வேண்டும். அதற்கு கூட்டு கட்சிகள் தமது குறுகிய தொழிற்சங்க நோக்கில் இருந்து விடுபட்டு அரசியல் பலத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு முன்னிற்க வேண்டும்.
கடந்த கால மலையக அரசியல் கூட்டணிகளை போன்றல்லாது தமிழ் முற்போக்கு கூட்டணி தமது இஸ்தீர தன்மையை வெளிக்காட்டி இருக்கின்றது. அதன்படி பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு தமது நான்காவது ஆண்டை கடந்திருக்கின்றது.
இக்காலப்பகுதியில் கூட்டு கட்சிகளான ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மிகுந்த விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.
தமது கட்சிகளின் குறுகிய அரசியல் செயற்பாட்டிற்கு அப்பால் சென்று சமூக நலனை முன்னிறுத்தி செயற்பட்டிருக்கின்றார்கள். இந்த முன்னெடுப்பின் மூலம் மலையக சமூகம் அடைந்து கொள்ள முடியாது தட்டித்தடுமாறிக்கொண்டிருந்த பல விடயங்களுக்கு தீர்வினை எட்ட முடிந்திருக்கிறது.

சட்டபூர்வமான காணி உறுதியுடன் தனி வீடுகள், நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பு, மலையகத்திற்கான தனியான அதிகார சபை மற்றும் அணைத்து துறைசார்ந்த அமைச்சுக்களின் செயற்பாடுகளும் மலையக தோட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளமை என சில முக்கிய விடயத்தை எடுத்துக்காட்டலாம்.
இவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டு மலையக சமூகத்தை கட்டி எழுப்ப தமிழ் முற்போக்கு கூட்டணி தனி ஒரு அரசியல் சக்தியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் போதே மலையக சமூகத்தின் தேவைகளை விரைவுபடுத்தி அடைந்துகொள்ள முடியும்.
எனவே கட்சி சார்ந்த குறுகிய அரசியல் எண்ணங்கள், தொழிற்சங்க முன்னெடுப்புகள் போன்றவற்றை பின்தள்ளி சமூக நலனை முன்னிறுத்தி அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதன் மூலம் மலையக சமூகத்தின் ஒன்றிணைந்த தனிப்பெரும் அரசியல் சக்தியை வெளிப்படுத்த முடியும். அரசிடம் கையேந்தாது எமது உரிமைகளை தட்டி கேட்டு பெறுவதற்கான ஒரே சக்தியாகவும் அது அமையும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment