கோரளைப்பற்று - கண்ணகிபுர வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

கோரளைப்பற்று - கண்ணகிபுர வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று - கண்ணகிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முல்லைநகர் வீட்டுத்திட்டத்தின் கீழான வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்தில் 25 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ள 75வது எழுச்சிக் கிராமம் இதுவாகும். இதற்கு ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்காக 3 கோடி ரூபா பெறுமதியான 'விசிறி' 'சொந்துறு கடனுதவியும் வழங்கப்டவுள்ளது.

No comments:

Post a Comment