ஈரான் அதிபருடன் புதின் சந்திப்பு - அணு பரவல் தடை ஒப்பந்தம் பற்றி ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

ஈரான் அதிபருடன் புதின் சந்திப்பு - அணு பரவல் தடை ஒப்பந்தம் பற்றி ஆலோசனை

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். 

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கண்காணிப்பாளராக மட்டுமே உள்ள ஈரானுக்கு இந்த அமைப்பில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும் என ரவுகானியிடம் புதின் உறுதி அளித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிர்த்து போராடுபவர்களுக்கு எதிராக ஈரானும், ரஷியாவும் மும்முரமாக பஷர் அல் ஆசாத்திற்கு ஆதரவாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment