தலங்கம, அகுரேகொட பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மோட்டர் வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ஹெரோயின் 15.6 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் ஹேகந்தர தெற்கு பகுதியை சேர்ந்தகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யபபட்டவர்களை இன்று (02) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment