நில அளவைத் திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1:50 000 வகை இலங்கை வரைபடம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களோடு தொடர்பான தகவல்கள் இந்த புதிய வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை வரைபடம் 92 பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் கொழும்பு நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதி 66 ஆவது பகுதியில் அமைந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் செய்மதிப் படங்கள், விமானப் படங்கள் மற்றும் நவீன தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment