மகளின் கோடாரி தாக்குதலினால் தந்தை வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

மகளின் கோடாரி தாக்குதலினால் தந்தை வைத்தியசாலையில்

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மகளின் கோடாரி வெட்டுக்கு இலக்காகி தந்தை பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தைச்சேர்ந்த அபூசாலி தாஐிதீன் (62வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கோடாரியால் வெட்டிய மகளின் மகன் சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,அவரை பார்க்க செல்லுமாறு கூறிய வேளை தன்னை கோடாரியால் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான தந்தை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தந்தையை கோடாரியால் வெட்டிய 26வயதுடைய மகள் தந்தை தன்னை தாக்கியதாக கூறி மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு அவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்துல் சலாம் யாசீம்

No comments:

Post a Comment