முல்லைத்தீவு விஸ்வமடு சிவில் பாதுகாப்புப் படையின் முகாமுக்குப் பொறுப்பாகவிருந்த இராணுவ உயர் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பந்து அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதைத் தாங்க முடியாது புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களும், பிரதேச மக்களும் கண்ணீர் விட்டு அழும் உருக்கமான காட்சி.
இங்கு, இடம்மாறிச் செல்லும் இராணுவ அதிகாரியை ஊர் மக்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக அழைத்துச் செல்வதையும் புலிகளின் முன்னாள் முக்கிய பொறுப்பாளர் அவரை கட்டியணைத்து அழுவதையும் படங்களில் காணலாம்.
பாதுகாப்பு படைகளில் வடக்கில் உள்ள மக்களை உண்மையில் நேசிக்கும் அதிகாரிகள் இருப்பதுடன், அவர்களை நேசிக்கும் மக்களும் இருக்கின்றனர்.


No comments:
Post a Comment