இன்புளுவன்சா வைரஸ் தாக்கம்: மேலும் இரு சிறுவர்கள் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

இன்புளுவன்சா வைரஸ் தாக்கம்: மேலும் இரு சிறுவர்கள் உயிரிழப்பு

இன்புளுவன்சா நோய் தொற்றிய மேலும் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக காராபிட்டி போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. கடந்த இரு மாதங்களில் இன்புளுவன்சா காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக ஆஸ்பத்திரி பணிப்பாளர் டொக்டர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

சிறுவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதே வேளை இன்புளுவன்சா தொற்றியதாக அடையாளங் காணப்பட்ட 37 சிறுவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அறிய வருகிறது. 

அத்தோடு தென்மாகாணத்தில் இன்புளுவன்ஸா வைரஸுக்கான தடுப்பு மருந்து கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ரன்ஜித் விதானகே தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து 2000 ரூபாவுக்கு விற்பதனையாகிறது. ஆனால் சில இடங்களில் 5800 ரூபாவரை இந்த மருந்து விற்பனையாவதாகவும் ரன்ஜித் விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோயை தடுப்பு மருந்தினால் கட்டுப்படுத்த முடியுமானால் ஏன் தடுப்பு மருந்தை அரசு இலவசமாக வழங்க முடியாது? இதில் சிக்கல் நிலை உண்டு. தனியார் ஆஸ்பத்திரிகளில் டொக்டர்களைச் சந்திக்க ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். தடுப்பூசி மருந்துக்கு வேறு கட்டணம் செலுத்த வேண்டும்.

வறிய மக்களுக்கு இந்த உயர் கட்டணங்களைத் தாங்க முடியாது. சுமையும் அதிகமாகிறது. ஆக மலிவு விலையில் இந்த மருந்தை வழங்க வேண்டும். அதிக விலையில் மருந்தை விற்பனை செய்வோரைத் தண்டிக்க வேண்டும் என்றும் பாவனையாளர்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment