இலங்கை நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் சீனாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட சீன நாட்டு பெண் ஒருவரை நேற்று (06) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த பெண் சீன நாட்டை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 என்ற விமானத்தில் சீனாவின் பீஜிங் நகரை நோக்கி பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து பின்னர் விமானத்திற்கு ஏறுவதற்காக 12 ஆவது நுழைவாயிலூடாக செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் பயணப்பையில் இருந்து 255 ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த பெறுமதி 12,75,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment