சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கோதுமை விதைகள் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கோதுமை விதைகள் பறிமுதல்

தனியார் துறை வியாபாரி ஒருவரினால் விலங்குகளுக்கான உணவுகளை தயாரிப்பதற்காக, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 107 கொள்கலன் கோதுமை விதைகள் தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

அதனடிப்படையில் குறித்த கொள்கலன்களை பறிமுதல் செய்யவும், குறித்த வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவருடைய அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யுமாறும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பீ.விஜயரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 

அதேவேளை குறித்த வியாபாரிக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment