களுத்துறை மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
குறித்த பகுதியில் மழை பெய்த காரணத்தினால் மைதானத்திர் நீர் நிரம்பி ஈரமாக இருந்துள்ளது.
நிலம் ஈரமாக இருந்தால் கிரிக்கட் விளையாடுவதற்கு சிரமம் ஏற்படும் என்ற காரணத்தினால், குறித்த நிலத்தை உலர வைக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக குறித்த மைதானத்திற்கு எரி பொருளை ஊற்றி அதை பற்ற வைத்துள்ளார்கள்.
இதன்போது மைதானம் பற்றி எரியும் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவுவதுடன், இவர்கள் ஆபத்தான முறையை பின்பற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment