வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றில் பட்டா வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற இளைஞன் (32) மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்டின் ஜன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7இலட்சம் பெறுமதியான பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இத்தாக்குதலின் போது வீட்டினுள் ஜன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மாத கைக்குழந்தையை தாயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியதனால் மயிரிழையில் குழந்தைக்கு எதுவித பாதிப்புமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment