வாகரைப் பிரதேச சபைக்குட்பட்ட கதிரவெளி புதூர் கிராம மக்களை வாகரைப் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கோணலிங்கம் திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதில் கதிரவெளி கிராம சேவகர் எஸ்.விஜயராஜன், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம், புதூர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது, மக்களால் தவிசாளரிடம் பிரதேசத்தில் காணப்படும் நீர்ப்பிரச்சனை, வீதி விளக்கு பிரச்சனை, மீனவர் சங்கப்பிரச்சனை உட்பட பல்வேறுபட்ட பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக தவிசாளர் எஸ்.கோணலிங்கம் தெரிவிக்கையில் ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தினால் ஒரு நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு, இன்னும் மக்கள் பாவனைக்கு சரியாக வழங்கப்படவில்லையென்றும், அதற்கு நீர் பம்மொன்று பொருத்தி அதனை பிரதேச சபை கண்காணிக்கும்.
அத்தோடு, வீதி விளக்கு தொடர்பாக வாகரை பிரதேச சபையால் ஒரு உறுப்பினருக்கு 20 மின் விளக்கு வழங்கப்பட்டதாகவும், அதனைப் பொருத்தமான இடத்தில் பொருத்த வேண்டுமென்றும், அந்த இடத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மணல் வீதிகள் அனைத்தும் கிறவள் வீதிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும், வீதிகளை அளப்பதற்கு கிராம மட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்றும், மீனவர் சங்கம், மீனவர் அமைப்பு என இரு பிரிவுகளாக இருப்பதாகவும் கூறியுள்ளீர்கள். இது தொடர்பாக மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி தீர்வு காணப்படும்.
இந்த கிராமத்திலிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் வாகரை பிரதேச சபையில் தற்போது பணமின்மையாலும், பிரதேச சபைக்கு அரசாங்கத்தால் இதுவரையும் பணம் ஒதுக்கப்படவில்லையெனவும், பணம் ஒதுக்கப்படுகின்ற போது உடனடியாக அனைத்துப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுமென்று மக்களிடம் தெரிவித்தார்.
அத்தோடு, 31 பெயருடைய பெயர் நிரந்தர நிலக்கடலைச்செய்கை செய்பவர்கள் என்று பெயர் அனுப்பப்பட்டதாகவும், இது கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கோ மற்றும் அமைப்புக்களுக்கோ தெரியாமல் தன்னிச்சையாக ஒரு உறுப்பினர் எடுத்து வழங்கியதாகவும், அதற்கு கிராம சேவகர் கையொப்பமிட்டு வழங்கியதாகவும் மக்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, கிராம சேவகர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கும் கிராம சேவகருக்குமிடையில் காரசாரமான விவாதத்தின் பின் இனி எந்தப்பதிவாகினும் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்குத் தெரியாமல் நடக்கக்கூடாதென்று கூறப்பட்டது.
thehotline.lk



No comments:
Post a Comment