கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் AG. அஸீஸுல் ரஹீம் மற்றும் நாவலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாதர் கான், செயலாளர் M. காதர் ஆகியோரின் முயற்சியில் நாவலடியில் நிர்மானிக்கப்பட்ட பொதுக்கிணறு மக்களின் பாவனைக்காக கடந்த 03.06.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் ரஹீம் அவர்களால் கையளிக்கப்பட்டது.
இப்பிரதேசங்களில் குறிப்பாக, நாவலடி பிரதேசங்களில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆழமான பாரிய கிணறுகளை அமைக்கும் பணித்தொடரில் குறித்த கிணறு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசங்களில் வரட்சி நிலவும் காலப்பகுதியில் குடிநீர்க் கிணறுகள் முற்றாக வற்றி மக்கள் பல்வேறு அசெளகரியங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேபோல உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சகோதரர் தாமாக முன் வந்து பொதுக்கிணறு அமைத்து உதவினால் இப்பிரதேச மக்கள் மேலும் நன்மையடைவர் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் AG. அஸீஸுல் றஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
றிஸ்வான் இப்றாஹீம்


No comments:
Post a Comment