திருகோணமலை மீனவர் பிரட்சினை தொடர்பாக கடற்படை தளபதி இம்ரான் எம்.பி சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

திருகோணமலை மீனவர் பிரட்சினை தொடர்பாக கடற்படை தளபதி இம்ரான் எம்.பி சந்திப்பு

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரட்சனைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுகொடுக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று காலை இலங்கை கடற்படை தளபதி S.S. ரணசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

அண்மையில் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடையை மூன்று மாத காலம் தற்காலிகமாக அகற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தார். 

மேலும் இந்த காலப்பகுதியில் கடற்படை, மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்தோருடன் பேசி இத்தடையால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரட்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடிவு எட்டப்பட்டது.

இதனடிப்படையில் மீன்பிடி தடை நீக்கப்படுவதாக கடற்தொழில் அமைச்சால் வழங்கப்பட்ட கடித்ததை கடற்படை தளபதியிடம் ஒப்படைத்த பாராளுமன்ற உறுப்பினர் நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை சம்மந்தமாக கடற்படை தளபதியுடன் விரிவாக கலந்துரையாடினார்.

இதன்பின் கருத்து தெரிவித்த கடற்படை தளபதி இந்த பிரட்சினைக்கு நிரந்தர தீர்வு காண தனது முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி அளித்தார்.

ஊடகப்பிரிவு

No comments:

Post a Comment