இன்று பகல் 12.10 மணியளவில் தெற்கு அதிவேக வீதியில் கடவத்தையில் இருந்து மாத்தறை நோக்கி துணி வகைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கெண்டர் ரக லொறி ஒன்று தீப்பற்றியுள்ளது. லொறியின் பின் பக்கத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தென் அதிவேக வீதியில் 19.51 மற்றும் 19.4 L என்ற இடத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அதில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் லொறியில் இருந்த அனைத்து துணிகளும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மில்லெனிய பொலிஸ் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தெற்கு அதிவேக வீதியின் கௌனிகம வௌியேறும் வாயில் பொலிஸ் காவலரன் அதிகாரிகளால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment