விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

மாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கார் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ள மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment