இஸ்ரேலிலுள்ள ஆபிரிக்க - அமெரிக்க பூர்வீகத்தைக் கொண்ட யூதர்களை குரங்குகள் என்று சாடியதன் மூலம் இஸ்ரேலின் பிரதான யூத மதகுருவான இட்சாக் யூசுப் பெரும் சர்ச்சையொன்றைக் கிளறியுள்ளார். வாராந்த சமய போதனை வகுப்பொன்றிலேயே இட்சாக் யூசுப் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேலின் உள்ளே புகைந்து கொண்டிருக்கும் யூதர்களுக்கிடையிலான இனவாதத்திற்கு இம்மதகுருவின் கருத்து எண்ணெய் வார்ப்பது போல் உள்ளதென்று அந்நாட்டின் பிரதான செய்திப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே கத்தியுடன் உலாவரும் எந்தவொரு பலஸ்தீனரையும் கொல்வது ஆகுமானது என இதே மதகுரு சமயத் தீர்ப்பளித்திருந்தார். பலஸ்தீனர்களுக்கு எதிரான படுகொலைகளையும் ஆக்கிரமிப்பையும் மத அடிப்படையில் நியாயப்படுத்துவதில் இட்சாக் யூசுபின் பங்கு அதிகமானது என இஸ்ரேலிய பத்திரிகை எழுதியுள்ளது.
மீள்பார்வை செய்திகள்


No comments:
Post a Comment