திருகோணமலையில் எதிர்வரும் புதன்கிழமை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அடுத்த பிரதேச கூட்டம் நடைபெறவுள்ளது.
பொதுமக்களுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் தொடர்பாடல் வேலைத்திட்டம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில், மன்னார், முல்லைத்தீவு, மாத்தறை மாவட்டங்களில் இந்த தொடர்பாடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து வருகின்றனர்.

No comments:
Post a Comment