நெதர்லாந்து நிதியுதவியின் கீழ், பூரண வசதிகளைக்கொண்ட சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்று களுத்துறை பெரியாஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.
தாய்-சேய் வோர்ட் தொகுதியுடன் இது அமைக்கப்பட உள்ளது இந்த வைத்தியசாலைக்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை பெரியாஸ்பத்திரியின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 11 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் முழு வசதிகளைக் கொண்ட கண் வைத்தியசாலையொன்றும் இங்கு அமைக்கப்படும்.
'சுவசெரிய' என்ற அம்பியுலன்ஸ் சேவை தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விபத்துக்களின் போது பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் விமான அவசர சேவையும் ஆரம்பிக்கப்படும்.
இந்த பெரியாஸ்பத்திரியில் விபத்துச் சேவைப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1 மாத காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்டோர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

No comments:
Post a Comment