சர்வதேச புகைத்தல் எதிர்ப்புக்கொடி தின நிதி சேகரிப்பும், முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் தியாவட்டவான் மயிலங்கரச்சை சமுதாய அடிப்படை அமைப்பினால் செயலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர், செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எல்.றியாஸ், சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், வலய முகாமையாளர் என்.செந்தூர்வாசன், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் எச்.எல்.எம்.கலீல், சமுர்த்தி வங்கி சங்கத்தலைவர் எஸ்.சிவலிங்கம், மயிலங்கரச்சை விகாராதிபதி, செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களுக்கு கொடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
நாம் எமது பிள்ளைகளின் சுற்றுச்சூழலை மதுபானம் மற்றும் சிகரட் புகையிலிருந்து விடுவிப்போம், புகைத்தலின் அபாயத்தினை ஒழித்து வறுமை நிலையினைக் குறைத்து அபிவிருத்தியினை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் மே 31 இன்று வியாழக்கிழமை முதல் ஜீன் மாதம் 30 திகதி வரை நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம். முர்ஷித்
ஊடகவியலாளர்
No comments:
Post a Comment