இன்று (19) பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார், கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேரணி, பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்தபோது, மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
சைட்டம் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
பேரணியில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள், பாராளுமன்றத்தை நோக்கி செல்வதற்கு முயன்றமையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

No comments:
Post a Comment