கதாநாயகனாக அறிமுகமாகும் நாகேஷ் பேரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

கதாநாயகனாக அறிமுகமாகும் நாகேஷ் பேரன்

காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் மற்றும் நடனக் கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், ‘ஸ்கூல் கெம்பஸ்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

A.M.N. பைன் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் “ஸ்கூல் கெம்பஸ்” திரைப்படத்தினை A.M.N. குளோபல் குரூப் முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர்.ஆர்.ஜே. ராம நாராயணா இயக்கி வருகிறார்.

இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கூறும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் மற்றும் படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு தேவா இசை அமைக்கிறார். மேலும், பிரபல பாடகர்களான ஆஷா போஷ்லே, பி. சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளனர்.

படத்தின் நாயகர்களாக நடித்துள்ள ராஜ்கமல், கஜேஷ் நாகேஷ் ஆகியோர்களுக்கு ஜோடியாக கீர்த்தி மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மேலும், இந்தத் திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment