மலையக சமூகத்தை தொடர்ந்தும் அரசின் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள் - பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

மலையக சமூகத்தை தொடர்ந்தும் அரசின் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள் - பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

"மலையக பெருந்தோட்டங்களில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை சிறுவர் விவகார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வாருங்கள். மலையக சமூகத்தை தொடர்ந்தும் அரசின் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள்." தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். 

கடை காரியாலய, ஊழியர்கள் சட்டம், மற்றும் மகப்பேற்று நலன்கள் சட்டம் என்பவற்றின் திருத்தங்களுக்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் மேலும் தொடர்ந்து உரையாற்றிய அவர். 

மலையக பெருந்தோட்டங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு பக்கப்பெற்று கால விடுமுறை முதல் இரண்டு குழந்தைகளுக்கு தலா 84 நாட்கள் ஏனையோருக்கு போல வழங்கப்பட்டு வருகின்றது. 

ஆனால் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கு அதில் அரைவாசி நாட்கள் மட்டுமே மகப்பேற்று கால விடுமுறை வழங்கப்படுகின்றது. எனினும் ஏனைய துறையில் உள்ளவர்களுக்கு முதல் இரு குழந்தைகளுக்கு போலவே 84 நாட்கள் மூன்றாவது குழந்தைக்கும் வழங்கப்படுகின்றது. 

புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தோட்ட தொழிலாளர்களும் மூன்றாவது குழந்தைக்கு ஏனையோரை போல் 84 நாட்கள் மகப்பேற்று விடுமுறை பெற முடியும். இந்த திருத்தைத்தை செய்திருக்கும் தொழில் அமைச்சிக்கும் அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

மலையக பெருந்தோட்டங்களில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் காணப்படுகின்றது. இவை தோட்ட நிர்வாகத்தினாலேயே நடத்தப்படுகின்றது. எந்த ஒரு நியமமும் அற்ற நிலையிலே இன் நிலையங்கள் காணப்படுகின்றன. பல குழந்தை பராமரிப்பு நிலையங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. 

அதுமட்டுமன்றி இன் நிலையங்களுக்கு பொறுப்பாக உள்ள ஊழியர்கள் எவ்வித தகைமையும் பயிற்சியும் அற்றவர்களாக உள்ளனர். ஆனால் இது தொடர்பாக சிறுவர் விவகார அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனை தங்களுக்குரிய ஒரு விடயமாக பார்ப்பதும் இல்லை. 

இந்த நிலைமை மாற்றி பெருந்தோட்டங்களில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை சிறுவர் விவகார அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வாருங்கள். மலையக சமூகத்தை தொடர்ந்தும் அரசின் பொறுப்பில் இருந்து ஒதுக்கி வைக்காதீர்கள்.

கடை காரியாலய ஊழியர் சட்டம் முக்கிய இடத்தை எமது நாட்டில் வகிக்கின்றது. ஆனால் அச்சட்டம் எந்த அளவிற்கு நடைமுறையில் இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. 

கடை காரியாலய ஊழியர்களுக்கு நியமன கடிதம் வழங்குதல், அவர்களின் வேலை நேரம், விடுமுறைகள் மற்றும் வேலை சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இச்சட்டம் கடைபிடிக்கப்படுகின்றதா என்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். 

சட்டம் நன்றாக இருக்கின்றது. அதன் திருத்தமும் நன்றாக இருக்கின்றது. ஆனால் சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்பட்டாலே இதன் பெறுபேற்றை நாம் அடைந்துகொள்ள முடியும். எனவே சட்டத்தில் மற்றும் திருத்தத்தில் காட்டுகின்ற கவனத்திற்கு அதிகமாக சட்டத்தை நடைமுறை படுத்துவதில் கவனம் காட்ட வேண்டும். அதன் போதே நாம் எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்துகொள்ள முடியும்.

No comments:

Post a Comment