கண்டி திகன கலவரத்தினால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான பெருமான முடைய வர்த்தக நிலையங்கள் மற்றும் பாரிய அளவில் சேதங்கள் சேதாமாக்கப்பட்டமக்கள் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கான முழுமையான இழப்பீட்டை வழங்குவதை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் மீண்டும் வழியுறுத்தியுள்ளார்.
கண்டி-திகன கலவரத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ள 80 குடும்பங்களுக்கு இழப்பீட்டை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதமர்ரணில் விக்ரமசிங்கவுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்குமிடையில் நேற்று (06) பாராளுமன்ற குழு அறையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றபோதே அமைச்சர் ஹக்கீம் இதனை வழியுறுத்தினார்.
இச் சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்இ எம்.எச்.ஏ. ஹலீம் ரிஷாட் பதியுத்தீன் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலவரம் ஏற்பட்டு ஓரிரு நாளில் பிரதேச செயலாக அலுவலகத்தினால் இழப்பீடுகளை மதிப்பீடு செய்த போது சிறிய சேதங்களை மட்டும் மதீப்பீடு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
முன்னர் கண்டி மாவட்ட செயலகத்தில் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் ஹக்கீம் சேதமடைந்துள்ள உடமைகளுக்கான முழுப் பெறுமதியையும் பிரதேச செயலாளர் காரியாலயத்தினூடாக மதீப்பீடு செய்து அனைத்து சேதங்களுக்கும் நஷ்டயீடு வழங்க வேண்டும் என வழியுறுத்தியதன் பின்னர் மீண்டும் பாரிய சேதங்களுக்குள்ளான உடைமைகள் பற்றிய 80 கோவைகள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட சேதமுடைய வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் உள்ளடங்களாக 80 கோவைகள் அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் விரைவாக மதிப்பீடு செய்து அதற்கான இழப்பீட்டு தொகையையை வழங்குமாறும் அமைச்சர் ஹக்கீம் பிரதமரிடம் வழியுறுத்தினார்.
இந்த கோவைகளை கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் விரைவாக மதிப்பீடு செய்து புணர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதனின் அமைச்சினூடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து குறித்த நஷ்டயீட்டை துரிதமாக வழங்க ஏற்பாடு செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்.
மேலும் இனவாதிகளின் தீக்கரைக்கு உள்ளாகிய அம்பாறை பள்ளிவாசலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்துக்கு 27 மில்லியன் ரூபாய் நஷ்டயீடு பெற்றுக் கொள்வதற்கான மதிப்பீட்டறிக்கை தயாரிகியுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment