வவுனியாவில் வட மாகாண சபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் தாக்கியலில் மாணவன் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா அவர்களின் மகனான தி.கிருஜன் (வயது 15) என்ற மாணவன் பாடசாலையின் 8ம் பாடநேர இறுதி வேளையில் தன் சக மாணவர்களோடு உரையாடிகொண்டு இருந்த வேளையில் அவ்விடத்திற்கு வந்த செல்வச்சந்திரன் என்ற ஆசிரியர் உரையாடியதை தவறாக நினைத்து குறித்த மாணவர்களை தாக்கியுள்ளார்.
தி.கிருஜன் எனும் மாணவனை தாக்கிய போது குறித்த மாணவனின் தலை அருகிலிருந்த சுவரில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான மாணவன் வவுனியா பொது வைத்தியாசலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வைத்தியசாலை பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment