காத்தான்குடி வட்சப் சமூக குழுமத்தினால் காத்தான்குடி முதலாம் குறிச்சியில் நிர்மானிக்கப்பட்ட வீடு பயணாளியிடம் 8.6.2018 இன்று சனிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹஸைனிய்யா வீதியில் வீடற்ற வறுமையான குடும்பத்தின் நிலையை கருத்திற் கொண்டு காத்தான்குடி வட்சப் சமூக குழுமம் இந்த வீட்டினை 278000 (இரண்டு இலட்சத்து எழுபத்தெட்டாயிரம்) ரூபா பெறுமதியில் நிர்மானித்துள்ளது.
இந்த நிதியில் 208000 ரூபாவை காத்தான்குடி வட்சப் சமூக குழுமம் சமூக பிரமுகர்களிடம் சேகரித்திருந்தததுடன் 70,000 ரூபாவை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் வழங்கியிருந்தது.
காத்தான்குடி வட்சப் சமூக குழுமத்தின் செயலாளர் ஏ.முகம்மட் பர்சாத் தலைமையில் நடைபெற்ற குறித்த வீட்டினை பயணாளிக்கு கையளிக்கும் நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை, சமூக செயற்பாட்டாளரும் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவருமான கே.முகம்மட் கலீல் (பிலால்) ஹாஜியார் உட்பட காத்தான்குடி வட்சப் சமூக குழுமத்தின் உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சிறப்புரையை அஷ்ஷெய்ஹ் எம்.எஸ்.எம்.நுஸ்ரி நழீமி நிகழ்த்தினார்.
குறித்த வீட்டின் நிர்மானத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் நிர்மான செலவு தவிர்ந்த மிகுதியாக இருந்த 2460 ரூபா பணம் பயணாளியிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
மிகவும் வறுமையான நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இந்த குடும்பம் ஒரு குடிசையில் எவ்வித வசதியுமின் வசித்ததை பார்த்த சமூக செயற்பாட்டாளர் முகம்மட் பர்சாத் அவரது கூடுதலான முயற்சியினால் அவர் சார்ந்த காத்தான்குடி வட்சப் சமூக குழுமத்தின் ஏற்பாட்டினால் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு பாராட்டத்தக்கதும் வரவேற்க வேண்டியதுமாகும்.
பர்சாதின் முயற்சியினை பாராட்டுவதுடன் அல்லாஹ் அவருக்கு இந்த புனித நாளில் நற்கூலியை வழங்கி றஹ்மத் செய்வானாக. இவரது இந்த நடடிவடிக்கை முன் மாதிரியான நடவடிக்கையாகும். இவ்வாறான பல நலிவுற்ற குடும்பங்களுக்கு நாம் உதவ முன் வரவேண்டும்.
அல்லாஹ் நமது தூய பணிகளை அங்கீகரிப்பானாக
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
8.6.2018






No comments:
Post a Comment