யாழ் போதனா வைத்தியசாலைக்கு படையினரால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு படையினரால் 24ம் திகதி வியாழக்கிழமை மருதங்கேணி பிரதேசத்தில் அமைந்திருக்கும் படையணி தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.
யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 10ஆவது விஜயபாகு காலாட் படையணியின் 24 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேமலாப நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் 10 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து இரத்த தானம் வழங்கினர்.
படையினரின் இச்செயற்பாடுகள் போதனா வைத்தியசாலையில் கடமைபுரியும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஊழியர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
மேலும், இரத்த வங்கிகளில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு இராணுவத்தினர் தாமாக முன்வந்து இரத்தம் தானம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment