மாட்டிறைச்சி பற்றிய விவகாரத்தில் இந்த மூன்று பேரும் தமிழ் சமூகத்திற்குள் இருந்து கொண்டே நியாயத்தின் பக்கம் - அதாவது முஸ்லிம்களின் பக்கம் சாா்ந்து தமது கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார்கள்.
கவிஞரும் நடிகருமான வ.ஐ.செ.ஜெயபாலன் முஸ்லிம்களால் மறக்க முடியாத ஒருவா். அதற்காகவும் அவரைச் சந்திக்க நோர்வே சென்றபோது விரும்பியிருந்தேன். ஆனால் சாத்தியப்படவில்லை. மெசன்ஜரிலும் தொலைபேசியிலுமாக உரையாடி இருக்கின்றேன்.
90களின் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்திற்காக ஜெயபாலன் எழுதிய கவிதை விடுதலைப் போராட்டத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. அதனால் அவா் பின்னர் ஆயுதங்களால் வெறுக்கப்பட்டார் என்பதே வரலாறு. அவர் மாடறுப்பின் நியாயங்களை எழுதியிருக்கின்றார்.
சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியா் சகோ. சிவராஜாவை தனிப்பட்ட ரீதியில் நெடுங்கலமாக அறிவேன். தொடர்பிலும் இருக்கின்றேன். பிழையை பிழை என்று சொல்பவா்.
“கிழக்கில் தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்“ என்று தினக்குரல் எழுதும் காலத்தில், ஆசிரியா் தலையங்கத்தின் ஊடாக மாட்டிறைச்சி மீதான முஸ்லிம்களின் உாிமையை சொல்லியிருக்கின்றார் என்பது லேசுபட்டதல்ல.
ஊடகவியலாளா் றுசாங்கனோடு ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருந்து ஊடக புலமைக் கற்கையை மேற்கொண்டுள்ளேன். எனது கணிப்பில் அவா் ஒரு மாற்றுச் சிந்தனையாளா். அவா் மாட்டிறைச்சி விவகாரத்தை முஸ்லிம்களின் வெளியேற்றத்தோடு ஒப்பிட்டு எழுதியிருக்கின்றார்.
இன்னும் இவா்கள் போன்ற எத்தனையோ தமிழ், சிங்கள முற்போக்காளா்கள் முஸ்லிம்களின் நியாயங்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் நண்பா்களோடு நெருங்கிப் பழகுபவன் என்ற அடிப்படையில், இவா்கள்தான் உண்மையில் தமிழினத்தின் மனச்சாட்சி என நான் கருதுகின்றேன். இவா்களின் நிலைப்பாடுதான் பெரும்பாலான சாதாரண தமிழ் மக்களின் நிலைப்பாடுகள்.
இவர்கள் போல ஏனைய சமூகங்களின் நியாயங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்தும் உருவாக வேண்டியுள்ளது.
யாருடைய எலும்புத் துண்டுக்காகவோ கூப்பாடு போடுவோர் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
ஏ.எல். நிப்றாஸ்
ஊடகவியலாளர் நிப்றாஸின் முக நூல் பக்கத்திலிருந்து
எம்.எஸ்.எம். நூர்தீன்
No comments:
Post a Comment