தம்புள்ளையில் புதிய வைத்தியசாலையை அமைப்பதற்காக 5 ஏக்கர் காணியை வழங்க ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விஹாரை முன்வந்துள்ளது.
சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச் வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் தம்புளு ரஜமஹா விஹாரை அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது விஹாரையின் பரிபாலகர் அதிசங்கைக்குரிய அம்பகஸ்வெவே ஸ்ரீ ராகுல தேரர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிய வைத்தியசாலையை அமைப்பதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 7 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. தம்புள்ளை டென்சில் கொப்பேகடுவ தள வைத்தியசாலையில் இடவசதி இல்லாததினால் புதிய வைத்தியசாலையை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வைத்தியசாலை விரைவில் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கு விஹாரை மஹாசங்கத்தினரிடம் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment