பௌத்த பிக்கு ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும் போது,அது தொடர்பாக மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே செய்யப்படல் வேண்டுமென பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலமைப்பில் இதற்கான ஏற்பாடு உள்ளது.
பௌத்த பிக்குமாருக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்வதற்கென புறம்பான நீதிமன்றமொன்று உருவாக்கப்படல் வேண்டும்.
கலகொட அத்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் துரித கதியில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவன்ட கார்ட் மற்றும் என்ட்ரஸ்ட் நிறுவன சந்தேக நபர்களுக்கெதிராக சட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்பட வில்லையென மக்கள் கவலைப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment