கடற்படையினரால் நெடுந்தீவில் வைத்திய முகாம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 1, 2018

கடற்படையினரால் நெடுந்தீவில் வைத்திய முகாம்

கடற்படையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலன் மற்றும் சமூக சேவையின் மற்றுமொரு நடவடிக்கையாக, வடக்கு கடற்படை தளத்தினால் நெடுந்தீவில் வைத்திய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற குறித்த நிகழ்வு, வடக்கு கடற்படை தளத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி, ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பொதுச் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் உதவியுடன் இடம்பெற்றது.

வடக்கு கடற்படை தளத்தின், வைத்திய பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால், நெடுந்தீவிலுள்ள, பொதுமக்கள் கலாசார மத்தியநிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில், குழந்தைகளுக்கான சிகிச்சைகள், கண், பல், உளவியல் மற்றும் உளரீதியிலான நோய்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில், துறைசார் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்திய இரசாயன ஆய்வுகூட அதிகாரிகளின் உதவியுடன் இவ்வைத்திய முகாமில் இலவசமாக சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மேலதிக போசாக்கு உணவுகள், இலங்கை திரிபோசா நிறுவனம், அரசாங்க மருந்தாக்க கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களால் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதோடு, மூக்குக் கண்ணாடிகளுக்கான அனுசரணையை யாழ்ப்பாண லயன்ஸ் கழகம் வழங்கியிருந்தது.

இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றதோடு, இவ்வாறான சேவைகள் தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment