ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் முழு முயற்சி மூலம் இடம்பெற்று வரும் பஸ் கொள்வனவுத்திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பஸ் வண்டியினைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணமாக ஒரு இலட்சம் (100,000) ரூபாய் கடந்த 30.05.2018ம் திகதி கட்டார் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் ஊடக இணைப்பாளர் சகோதரர் AGA.ஹனீஸ் அவர்களூடாக கொழும்பிலுள்ள லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. உமேஷ் கௌதமிடம் செலுத்தப்பட்டுள்ளது என்ற சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த 28.05.2018ம் திகதி ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக், எம்.எம்.நவாஸ் ஆசிரியர், பிரதி அதிபர் றியாஸ் நளீமி (அபிவிருத்தி) மற்றும் கட்டார் பழைய மாணவர் சங்க கிளையினர் சார்பாக AGA.ஹனீஸ், ஆகியோர் அடங்கிய குழுவினர் கொழும்பு சென்று பொருத்தமான பஸ் வண்டியைப் பார்வையிட்டு பதிவையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகனக்காப்புறுதி உட்பட குறித்த பஸ் வண்டியின் மொத்தப்பெறுமதி சுமார் முப்பத்து நான்கு (34) இலட்சம் ரூபாய்களாகும். வாகனத்தரிப்பிடம், திரைச்சீலை, ஸ்டிக்கர் வேலைகள், வாகனக்கையளிப்பு வைபவம் போன்றவை உள்ளடங்களான செலவீனமாக சுமார் மூன்றரை இலட்சம் (350,000) ரூபாயுடன் மொத்தமாக முப்பத்தியேழு இலட்சத்து ஐம்பதாயிரம் (3,750,000) மொத்தமாகத் தேவைப்படுகிறது.
இதுவரை எமது பஸ் கொள்வனவுத்திட்ட வங்கிக்கணக்கில் சுமார் இருபத்தியெட்டு இலட்சங்கள் (2,800,000) இருப்பில் உள்ளதுடன், பஸ் வண்டி முற்பதிவுக்காக செலுத்தப்பட்ட ஒரு இலட்சம் (100,000) ரூபாய்களுடன் மொத்தமாக 29 இலட்சங்களே எம்மிடம் உள்ளன.
எனவே, எமக்கு இன்னும் மேலதிகமாக இலங்கை ரூபாய் சுமார் எட்டு இலட்சத்திற்கு ஐம்பதாயிரம் (8,50,000) ரூபாய்கள் (19.500 கட்டார் றியாழ்கள்) தேவைப்படுகின்றன.
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் இறுதிக்கட்ட முயற்சியில் கட்டார் வாழ் கல்குடா சகோதரர்கள் அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி மீதமாகத் தேவைப்படும் நிதியினையும் திரட்டி ஒட்டு மொத்தமாக பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் நூறு வீதப்பங்களிப்புடன் குறித்த பஸ் வண்டியை எமது பிரதேச பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு வழங்க ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
எட்ட முடியாத இலக்கு என்றே பலர் தள்ளி நின்று விமர்சங்களை மட்டும் செய்து கொண்டிருந்த நிலையில், இந்த அடைவை நாம் சென்றடைய பலர் எம்மோடு தோளோடு தோள் நின்று உழைத்துள்ளீர்கள். உங்கள் உழைப்பில் நீங்கள் எம்மிடம் கையளித்த ஒவ்வொரு ரூபாய்களும் எவ்வித சேதாரமும் இல்லாமல் எமது பஸ் கொள்வனவுத்திட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டு,அதன் இறுதி இருப்புக்கள் பகிரங்கப்படுத்தப்பட்டே வந்துள்ளமை யாவருமறிந்த விடயமே.
அதனூடாக இந்த இலக்கினை நாம் எட்டி இன்று பஸ் வண்டிக் கொள்வனவிற்கான முற்பணத்தினைச் செலுத்தியுள்ளோம். என்ற இந்த செய்தி இத்திட்டத்திற்காக அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் சமர்ப்பனமாகட்டும் என்ற பிரார்த்தனைகளுடன், எமக்கு மீதியாகத்தேவைப்படும் நிதியினையும் சேகரித்து இத்திட்டத்தினை மிக விரைவில் நிறைவுக்கு கொண்டு வர சகலரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென இப்புனித மாதத்தில் தங்களிடம் வேண்டிக்கொள்கிறோம்.
உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரைத் தொடர்பு கொள்ள முடியுமென்பதுடன், நிதி சேகரிப்புக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எதிபார்ப்பதோடு, எமது திட்டம் தொடர்பிலான விளக்கக்கையேடுகள் எம்மிடமுள்ளன. அவைகளையும் பெற்று தங்களுக்கு தெரிந்த சகோதரர்கள், நிறுவனங்கள், நிறுவன உரிமையாளர்கள் போன்றோருக்கு கையளித்து நிதிகளைச் சேகரித்து கொள்ள உதவ முடியுமென்ற தகவலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறித்த பஸ் கொள்வனவுத்திட்டம் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பணி. அதனை உங்கள் அனைவரது உதவி, ஒத்தாசையுடன் நாமே செய்து முடிப்போம் என்ற உயரிய எண்ணத்திலுள்ளோம் என்ற ஆணித்தரமான செய்தியை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பஸ் கொள்வனவு முதல் அதற்கான காப்புறுதி, பஸ் வண்டிக்கான கொட்டகை போன்றவற்றையும் நாமே செய்து கொடுத்து, அந்த பஸ் வண்டிக்கான ஆவணங்களையும் பஸ் வண்டிச்சாவியையும் எமது கைகளால் உங்கள் அனைவர் முன்னிலையிலும் கட்டாரில் வைத்து வழங்குவோம் என்ற வாக்குறுதியினையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆகவே, எமது திட்டம் பூரணத்துவமடையும் நிலையில், எந்தத்தரப்பினரது கையகப்படுத்தலுக்கும் அதனை வைத்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்வதற்கும் நாம் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்திட்டம் தொடர்பில் வெளிவரும் வீண் விமர்சனங்கள் தொடர்பில் எம்மைத்தொடர்பு கொண்டு பலர் வினவி வருகிறீர்கள். அவ்வாறான நிலையில் அவற்றுக்கு பதிலாக இந்த செய்தி அமையும்.
இவ்வாறான சகல விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் இன்ஷா அல்லாஹ் பாடசாலைச் சமூகத்தை அழைத்து நாம் பஸ் வண்டியினைக் கையளிக்கும் நிகழ்வு பதிலாக அமையும் என்ற தகவலையும் பகிர்ந்து கொள்கிறோம்.
பஸ் கொள்வனவுத்திட்ட கணக்கு பற்றிய மேலதிக விபரங்களுக்கும் தங்களின் பங்களிப்புக்களை வழங்கவும் எமது கணக்காளர் MBM,இஸ்ஸத் அவர்களைத்தொடர்பு கொள்ள முடியும். (தொலைபேசி - 66031219, மின்னஞ்சல் - issath1977@yahoo.com, வட்ஸ்அப் - 66031219)
பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கு உதவ விரும்புவோர் எமது கணக்கிலகத்திற்கு நேரடியாகவும் வைப்பிலிட முடியும்.
எமது கணக்கு விபரம்
Bus Project Of Oddamavadi Central College
Old Boys Qatar Association
340-2-001-3-0029339
Peopl’s Bank
Oddamavadi Branch.
Media-OBA Qatar
No comments:
Post a Comment