இவ்வருட ஹஜ் கடமையினை மேற்கொள்ளவுள்ள ஹஜ் முகவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் ஹஜ் முகவவர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் நடைபெறவுள்ளது.
அஞ்சல் திணைக்களத்தின் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் நியமனம் பெற்றுள்ள 95 ஹஜ் முகவர்களில் 83 பேர் அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
சில ஹஜ் முகவர்கள் 10 க்கும் குறைவான கடவுச்சீட்டுக்களையே பெற்றுக்கொண்டுள்ளதால் அவர்ககள் ஏனைய ஹஜ் முகவர்களுடன் இணைந்து கொள்வதற்கான கால அவகாசம் நாளை செவ்வாய்க்கிழமை வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கோட்டா பகிர்வு முறையில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்கு அகில இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கம் இன்று கொழும்பு முஸ்லிம் மகளிர் வலய மண்டபத்தில் கூட்டமொன்றினையும் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வருடம் இலங்கைக்கு 3000 கோட்டா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் 2800 ஹஜ் யாத்திரிகர்கள் பயணிக்கவுள்ளனர். ஏனைய 200 கோட்டாவும் ஹஜ் வழிகாட்டிகள், சமையற்காரர்கள் என்போருக்கு வழங்கப்படவுள்ளன.
Vidivelli

No comments:
Post a Comment