தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 11, 2018

தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை (BC Form) சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதனடிப்படையில் 90 வீதமான படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

சிலர் இறுதித்தருணம் வரையில் குறித்த தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை ஒப்படைக்காததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தேர்தல் தலைமையகம் தெரிவிக்கின்றது. 

எதிர்காலத்தில் பல்வேறு தேர்தல்கள் நடைபெற இருப்பதால் அவற்றிற்கு குறித்த வாக்காளர் பட்டியலே கருத்திற்கொள்ளப்படும் என தேர்தல் தலைமையகம் மேலும் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment