வடமாகாணத்தில் நுண்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் தெரிவித்தார்.
நுண்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று (08) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர், வடமாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்கடன்கள் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
வடமாகாணத்தில் இந்த நுண்கடன் செயற்பாடுகளினால் 59 இக்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு நுண்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு அதனடிப்படையில் வடமராட்சி கிழக்கு மக்களும், கடற்படை மற்றும் நீரியல்வளத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தெரிவிக்கப்பட்ட நிபந்தனையை மீறும் செயற்பாடு வெளிப்படும் போது, உடனடியாக கடற்படையினருக்கு தெரிவித்து வெளிமாவட்ட மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 3 தினங்களுக்குள் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரின் உத்தரவாதத்திற்கு அடிப்படையில் மக்களுக்கு திருப்தியான முறையில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா எனப் பார்ப்போம்.
அவ்வாறு நடக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் நிர்வாக முடக்கப் போராட்டத்தை தொடருவோம். கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தமது கடமையினைச் செய்வதற்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மற்றும் கடலட்டை தொழில் செய்யும் மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை திறம்பட செய்வதற்கும் அனுசரணையாக கதவை திறந்து, அவர்களது கடமையை செய்ய அனுமதி அளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கே.சயந்தன், சுகிர்தன், மற்றும் பரம்சோதி, உட்பட மாநகர ஆணையாளர், இம்மானுவேல் ஆர்னோல்ட், மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பொது மக்கள் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மாநரக சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment