5 பிள்ளைகளின் தாய் மீது தாக்குதல்: திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

5 பிள்ளைகளின் தாய் மீது தாக்குதல்: திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

பெண்ணொருவர் தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்தக் கோரி திருகோணமலை – பாட்டாளிபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான 36 வயதான பெண் கடந்த 3 ஆம் திகதி சிலரால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணையை துரிதப்படுத்துமாறும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் உரிய தகவல்களை பெற முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரால் முறைப்பாட்டை எழுத்திலேனும் சமர்ப்பிக்க முடியாதுள்ளதால் விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க முடியாதுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment