துனிசியா கடற்பகுதியில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

துனிசியா கடற்பகுதியில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 குடியேறிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். 

மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. 

சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.

இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. 

இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

இவ்வகையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கி காணாமல்போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment