பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துடன் இணைந்ததான டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 30 இலட்சம் ரூபாவை கேட்கும் பட்சத்தில் அதனை திருப்பிக் கொடுக்க தயார் என்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார். நேற்று விஷேட ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.
இதேவேளை அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் சீ. நெவில் குருகே கூறினார்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

No comments:
Post a Comment