நாளைய தினம் (03) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமான நிலையங்களின் நேரங்களில் மாற்றம் ஏற்படும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திர வான் பரப்பில் மேற்கொள்ளப்படும் பரீட்சார்த்த விமான பறப்பு நடவடிக்கைகள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் இது தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள, தங்களது பயண முகவர்கள் அல்லது 1979 எனும் உடனடித் தொலைபேசியின் ஊடாக ஸ்ரீலங்கன் விமான சேவையைத் தொடர்பு கொள்ளலாம் என, அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நாளை (03) அதிகாலையில் இடம்பெறவுள்ள கோலாலம்பூர், சிங்கப்பூர், பெங்கொக் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான சேவைகளுக்கும் இது பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment