மக்களின் நன்மைகருதி சேவையை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு நான்கு குழு நியமிப்பு - ஓட்டமாவடி பிரதேச சபை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

மக்களின் நன்மைகருதி சேவையை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு நான்கு குழு நியமிப்பு - ஓட்டமாவடி பிரதேச சபை

ஓட்டமாவடி பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு பிரதே சபைத்தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன் தலைமையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது, பெருநாள் காலங்களில் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்ட பகுதிகளில் கலாசாரத்தைச் சீரழிக்கும் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், உலமா சபைகளின் அனுமதி பெறப்படும் நிகழ்வுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமென சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்ட பகுதிகளில் மக்களின் நன்மைகருதி சேவையை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு நான்கு குழு நியமிக்கப்பட்டதுடன், இதில் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒரு குழுவில் மூவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், நிதி மற்றும் கொள்கை உருவாக்கும் குழு, வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்திக்குழு, தொழில்நுட்பக்குழு, சுற்றாடல் வாழ் வசதிகள் குழு என குறித்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2017ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நீதிமன்ற குற்றப்பணம் மற்றும் முத்திரை தீர்வைப்பணம் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவதாக தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன் தெரிவித்தார்.

மேலும், சபைக்குரிய பழுதடையும் வாகனங்கள் சிறந்த இடங்களில் திருத்திக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அதிக போதைப்பாவனைகள் காணப்படுவதைக் கண்டறியும் வகையில் வீதிகளில் சீசீடிவி கமராக்களைப் பொறுத்துவதற்கு உதவி கோரி போக்குவரத்து அமைச்சுக்கு திட்ட வரை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன் தெரிவித்தார்.

இவ்விரண்டாவது அமர்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், நிருவாக உத்தியோகத்தர் அ.அக்பர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பிரதித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, சபை உறுப்பினர் எம்.எம்.ஹனிபா ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.எம். முர்ஷித் 
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment