திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகள் முஸ்லிம் பெண்களுக்காக இஸ்லாம் வகுத்துக் கொடுத்துள்ள கலாசார முறைப்படியான பெண்களின் கண்ணியம் காக்கும் ‘ஹபாயா’ அணிவது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சர்ச்சை முஸ்லிம் சமூகத்துககு எதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் RSS இன் சதித் திட்டமாகும். தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு இடயிலான நல்லுறவை இரு சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கிழித்தெறிவதற்கான ஒரு சதித்திட்டமே இங்கு அரங்கேற்றப்பட்டுள்ளது.
சில தீய சக்திகளால் கையாளப்படும் இந்த சந்தேகத்துக்கு இடமான சதி முயற்சிகள் இரு சமூகங்களினதும் நலன் கருதி முளையிலேயே சமாதானமான முறைகளைக் கையாண்டு களையப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் தமது தீய நோக்கம் கொண்ட சொந்த நிகழ்ச்சி நிரலுடன் உள்நாட்டில் நிலை கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகள் இந்த நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இரு சமூகங்களுக்கும் பாதிப்பக்களை எற்படுத்தக் கூடிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வாய்ப்புண்டு.
இன்று இந்த நாட்டின் அரசியல் நிலைமைகள்; ஊழல், மோசடி, வர்த்தகமயமாக்கல், இனவாதம் மற்றும் குற்றப் பிண்ணனிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. 30 வருடகால யுத்தம் ஏற்படுத்திய காயம் இன்னும் குணப்படுத்தப்படவில்லை. அந்தக் காயங்கள் சிக்கல் மிக்கவையாகக் காணப்படுகின்றன. இரு சமூகங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன.
இனவாத யுத்தம் 2009 மே மாதத்தில் முடிவடைந்த பிறகு சமூகங்களை ஒன்றிணைக்கும் பணியை ராஜபக்ஷ அரசு மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில இட்டுச் செல்லும்; என முழு நாடும் எதிர்ப்பார்த்தது.
ஆனால் அது நடக்கவில்லை. மாறாக எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் ராபக்ஷ அரசின் அனுசரணையோடு வன்முறைகள் மற்றும் இனவாதம் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டு இந்த நாடு நரகமாக மாற்றப்பட்டது. இந்த மோசமான நிலையில் இருந்து விடுபடுவதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதனை அடுத்த பொதுத் தேர்தலிலும் மக்கள் மைத்திரி – ரணில் சுட்டணிக்கு நம்பிக்கையோடு வாக்களித்தனர்.
ஆனால் மைத்திரியும் ரணிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். மாறாக அவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான ராஜபக்ஷ யுகத்தின் இனவாதத்தையே தொடர்ந்தனர்.
தெற்கில் உள்ள இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான தமது சொந்த நிகழ்ச்சி நிரலை இந்த அரசின் கீழும் அமுல் செய்யத் தொடங்கின. அரசாங்கம் அதை கண்டு கொள்ளத் தவறிவிட்டது. ஏற்கனவே மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பிளவு படுத்தி இதை விட மோசமான நிலைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை நிச்சயமாக இந்த இனவாத சக்திகள் தவற விடப்போவதில்லை.
இவ்வாறான சூழ்நிலைகளின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் யார் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி தமது சொந்த நலன் கருதி ஒற்றுமையாக வாழவேண்டியது கட்டயாமாகும்.
கடந்த காலங்களைப் போல் அன்றி இன்று இலங்கை அழிவை ஏற்படுத்தும் சர்வதேச சக்திகளின் ஆடுகளமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த சக்திகள் எல்லாமே இந்த நாட்டை குட்டிச் சுவராக்கும் தீய நோக்குடன் தமக்கே உரிய சொந்த நிகழ்ச்சி நிரல்களோடு இங்கு நிலை கொண்டுள்ளனர்.
உதாரணத்துக்கு இந்து பாஸிஸவாதிகளான ராஸ்திரிய சுவயம் செவாக் அல்லது சுளுளு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அடியோடு துடைத்தெறியும் கொள்கைப் பிரகடனத்தை; நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட ஒரு அமைப்பு. அவர்கள் இங்கு உள்ளார்கள் என்பது பொதுவாகத் தெரிந்த ஒரு விடயம். ஊடகம் போன்ற உணர்வுபூர்வமான துறைகளுக்குள் அவர்கள் ஊடுறுவி உள்ளார்கள் என்ற சந்தேகமும் பரவலாகக் காணப்படுகின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன் மரவண்புலவு சச்சிதானந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் RSS அலுவலகத்தை திறந்து வைத்தனர். தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் சுளுளு சிவசேனா நிகழ்ச்சி நிரல் இதன் மூலம் இங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்து மதத்தை ஊக்குவிப்பதோ அல்லது பிரபலப்படுத்துவதோ அவர்களின் நோக்கம் அல்ல. மாறாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக இந்துக்களைத் தூண்டி விடுவது தான் அவர்களின் குறிக்கோள்.
இதுபற்றி மரவண்புலவு சச்சிதானந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுளுளு வவுனியா அலுவலகமானது RSS, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சிவசேனா என்பனவற்றின் ஆலோசனை பெற்றே திறந்து வைக்கப்படுவதாகக் கூறினார்.
RSS இங்கு வருகை தந்துள்ளமை பற்றியும் அதன் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரல் பற்றியும் பலர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இப்போது திருகோணமலை பாடசாலை விடயம் தலைதூக்கியுள்ள நிலையில் அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உற்பட LTTE ஆதரவு சக்திகளும் இந்த சர்ச்சையின் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விடயத்தை சமாதானமான முறையில் தீர்த்து வைக்க தான் பல தமிழ் அரசியல்வாதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும் ஆனால் எந்த ஒரு தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும் இதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சில தகவல்களின் படி ஒரு RSS முகவர் முஸ்லிம் பெண் போல் பாசாங்கு செய்து ஹபாயா அணிந்து வந்து கல்லூரிக்குள் வேண்டத்தகாத முறையில் நடந்து இந்த விடயத்துக்கு மேலும் தூபம் இட முனைந்தமை தெரியவந்துள்ளது. இவரிடம் தமிழ் பெண்களையும் தமிழ் சலாசாரத்தையும் கேவலப்படுத்தும் வகையிலான சில படங்களும் எழுத்துக் குறிப்புக்களும் கூட இருந்துள்ளன. இவை முஸ்லிம்களின் பெயரால் தயாரிக்கப்பட்டவை போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டைத் தூண்டிவிடும் ஒரு சதி முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை.
இவற்றைப் புரிந்து கொள்ள முடியாத இரு சமூகங்களையும் சேர்ந்த குறுகிய நோக்கம் கொண்ட சில சக்திகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் உடனடியாக இந்த விடயத்தில் தலயிட்டு இந்தப் பிரச்சினைக்கு மிக விரைவில் நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமுன் சமாதானமான முறையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தச் சம்பவம் பற்றி பக்கச்சார்பற்ற விதத்தில் நியாயமான ஒரு விசாரணை நடத்தப்பட்டால், இந்தச் சம்பவத்தின்; பின்னால் உள்ள உண்மையான தீய சக்திகளை அடையாளம் காண அது வழிவகுக்கும். ஆனால் நாட்டில் காணப்படும் குழப்பமான சரிவடைந்து வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக இவ்வாறான ஒரு விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படுவது பெரும்பாலும் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.
மறுபுறத்தில் முஸ்லிம் நாடுகளில் யுத்தத்தை தூண்டி விடுவதிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அந்த நாடுகளை சின்னாபின்னப் படுத்துவதிலும் பிரதான சூத்திரதாரியாகத் திகழும் இஸ்ரேலின் பிரசன்னமும் தற்போது இந்த நாட்டில் உள்ளது. அவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது சொந்த வேலைத் திட்டத்தோடுதான் இங்கு வந்துள்ளனர். ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இந்த நாட்டில் இஸ்ரேலின் வருகையோடுதான் இனவாத அமைப்புக்கள் தலைதூக்கின. இன்று இந்த நாட்டில் முஸ்லிம்களால் நிம்மதியாக வாழ முடியாத சூழலை அவர்கள் முன்னின்று உருவாக்கினர்.
இஸ்ரேலிய யூத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் சுளுளு உடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். பல்வேறு சக்திகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடுவதில் இந்த சக்திகள் தற்போது முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழர்களைக் கொண்ட ஒரு குழு எந்த விதமான நியாயமான காரணமும் இன்றி இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இஸ்ரேலின் கொடியுடன் அவ்வாறான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது முஸ்லிம்களின் ஆத்திரத்தை தூண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். இருந்தாலும் இவை பற்றி கவலைப்படாமல் அந்தக் கூலிப்படையினர் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் என்பது தெரியாமலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேவேளை இஸ்ரேலியர்கள் இந்த நாட்டில் அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் ஆசீhவாதம் என்பனவற்றுடன் தான் தங்கி உள்ளனர். கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அவர்கள் பல்வேறு திட்டங்களோடு பல்வேறு போர்வையில் நடமாடி வருகின்றனர் என சில தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களது வருகையின் பின்தான் சிங்கள மக்களின் எண்ணங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டு அண்மைக்கால அசம்பாவிதங்களும் இடம்பெற்றன.
இஸ்லாத்தை முன்னொருபோதும் இல்லாத வகையில் காரசாரமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவும் தீவிரவாத பௌத்த அமைப்புக்கள் ஈடுபடத் தொடங்கியது இவர்களின் தூண்டலில் தான் என்பது பரவலாக உள்ள சந்தேகமாகும். பொது பல சேனா அமைப்புக்கு தென் பகுதியில் ஒரு இல்லத்தை அன்பளிப்பாக வழங்கியவர் ஒரு ஜெர்மனிய யூதர் என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சீர்குலைக்க வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம் என்பது தெட்டத் தெளிவாகப் புலனாகும் ஒரு விடயமாகும்.
அழிவை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படும் சிங்கள இனவாத அமைப்பான பொது பல சேனாவும் ஏனைய பௌத்த அமைப்புக்களும் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு வருகின்றன. ரணில் – மைத்திரி கூட்டரசும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பேரழிவாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போதை அரசின் ஆதரவும் இந்த இனவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு தான் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஹபாயா விவகாரத்துக்கு எவ்வித காலதாமதமும் இன்றி இனக்கமானதோர் தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயமாகும்.
பிரிவினையையும அழிவையும் ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் RSS, BJP மற்றும் VHP போன்ற சக்திகளுக்கு இடமளிப்பது இந்த நாட்டில் ஒரு போதும் நன்மையை ஏற்படுத்தாது. அது தற்போது எமக்கு நன்மையளிக்கக் கூடியதும் எமக்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுவதுமான இரு சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாகவே அமையும். வடக்கு கிழக்கில் மட்டும் அல்ல அதற்கு வெளியிலும் இதே நிலைதான்.
(இந்தக் கட்டுரை 2018 ஏப்பிரல் 30ம் திகதி திங்கள் கிழமை எழுதப்பட்டது)
மீள்பார்வை செய்திகள்
No comments:
Post a Comment