சிங்கப்பூரின் விலங்குத் தோட்டம், இனுக்கா பனிக்கரடி கருணைக் கொலை செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக தகவல் அறிவித்துள்ளது.
மேலும், காலை 7 மணிக்கு மயக்க மருந்தின் உதவியுடன் அதற்கு விடைகொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தெரிவித்துள்ளது.
இக் கரடியை கருணை கொலை செய்தவதற்கான காரணம், சிறிது காலமாக இனூக்காவின் உடல்நலம் குறைந்துள்ளதோடு மூட்டுவலி, பல் வலி தொடர்பான பிரச்சினைகள், மற்றும், காதில் ஏற்படும் கிருமித்தொற்று ஆகியவற்றால் கரடி மிகவும் சிரமபட்டு வந்துள்ளது. மற்றும், இனுக்காவின் பாதங்களிலும், வயிற்றுப் பகுதியிலும் காணப்பட்ட ஆழமான காயங்கள் ஆறவில்லை.
இந்த கரடி 3 வாரச் சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் பிறந்த இனுக்கா, வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த முதல் பனிக்கரடி இதுவாகும் என்பது சிறப்பான விடயமாகும்.
No comments:
Post a Comment