மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்துக - பிரதி ஆணை­யாளர் எம்.எம்.மொஹமட் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்துக - பிரதி ஆணை­யாளர் எம்.எம்.மொஹமட்

மாகாண சபைத் தேர்­தல்­களை உரிய காலத்தில் நடாத்­து­வ­தற்கு நடவ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­குழு ஜனா­தி­பதி, பிர­தமர், சபா­நா­யகர் மற்றும் அர­சியல் கட்­சி­களின் செய­லா­ளர்­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ள­தாக தேர்தல்கள் ஆணைக்­கு­ழுவின் பிரதி ஆணை­யாளர் எம்.எம்.மொஹமட் தெரி­வித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சினால் பாராளுமன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்­கையை விவா­தத்­திற்கு எடுத்து, தாம­தி­யாது அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­வ­தற்கு உரிய நடவடிக்கைகளை முன்­னெ­டுக்கும் படியும் தேர்­தல்கள் ஆணைக்குழு, அர­சியல் கட்­சி­களின் செய­லா­ளர்­களைக் கோரியுள்ளது.

மாகாண சபைத் தேர்­தலை தாம­தி­யாது உரிய காலத்தில் நடத்துவதற்குஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் கோரப்­பட்­டுள்­ளது.

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை பாராளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தி­னாலே தற்­போது ஆளு­நரின் அதி­கா­ரத்தின் கீழள்ள வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கால­தா­ம­த­மா­வ­தற்குக் காரணம் எனவும் பிர­தி­தேர்தல் ஆணை­யாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு மாகாண சபை­களின் பதவிக் காலம் கால­வ­தி­யாகி 8 மாதங்­க­ளா­கியும் அம்­மா­கா­ணங்கள் ஆளுநர்­களின் ஆட்­சியின் கீழ் இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­களின் பதவிக்­காலம் இவ்­வ­ருட இறு­தி­யிலும் மேல், தென் மற்றும் ஊவா மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் அடுத்த வரு­டத்திலும் காலவதியா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பத­விக்­காலம் கால­வ­தி­யா­கி­யுள்ள சப்ரகமுவ வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலை தாமதியாது விரைவில் நடாத்தும்படி கூட்டு எதிரணியினர், கபே அமைப்பு என்பன அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

Vidivelli

No comments:

Post a Comment