குழந்தையைப் பிரசவித்து சில மணி நேரங்களிலேயே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஸெய்னப் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

குழந்தையைப் பிரசவித்து சில மணி நேரங்களிலேயே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஸெய்னப்

தனது இரண்டாவது பெண் குழந்தையைப் பிரசவித்திருந்த 26 வயது ஸெய்னப் அப்துல்லாஹ் என்ற அமெரிக்காவின் மின்ஸ் பொலிஸ் பிரதே சத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் 21 மணிநேரத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

இரவு 8 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான சல்மாவைப் பெற்றெடுத்த அவர் மறுநாள் மாலை விசேட கல்வித்துறையில் முதுமானி டிப்ளோமா பட்டத்தினை பெற்றுக் கொண்டார்.

எனது குடும்பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்டத்தை எட்டிய முதலாவது அங்கத்தவர் நான் என்பதால் தனக்கு பட்டத்தினை பெற்றுக்கொள்வது முக் கியமாக இருந்தது என ஸெய்னப் அப் துல்லாஹ் தெரிவித்தார்.

சென் தோமஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 2006 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய அவர் தற்போது தனது சொந்த பகல் நேர பராமரிப்பு நிலையத்தினை நடத்தி வருகின்றார்.

இந்த இலக்கை அடை வதற்காக இரவு நேரத்திலேயே தான் பாடங்களைப் படித்ததாக ஸெய்னப் தெரிவித்தார். | குழந்தையைப் பிரசவித்த மறுநாளே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள் வது பைத்தியக்காரத்தனமான செயல் என தான் கருதியபோதிலும் ஸெய்ன பிற்கு பட்டத்தினை நேரடியாகப் பெற் றுக்கொள்வதிலேயே ஆர்வம் இருந்தது என ஸெய்னபின் தாயார் 5() வயதான அனாப் யுகுப் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து , கொள்ளும் தனது திட்டத்தைத் தெரி வித்ததும் தனது நண்பிகள், குடும் பத்தினர் மற்றும் வைத்தியர்கள் கூட அதிர்ச்சியடைந்ததாக ஸெய்னப் தெரி வித்தார்.

இந் நிகழ்வில் நான் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டும் என விரும்பியதற்கான காரணம் எனது குடும்பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்டத்தை எட்டிய முதலாவது அங்கத் தவர் நான் என்பதனாலாகும். அதுதான் நான் செல்ல வேண்டும் என தீர்மானித் ததற்கான காரணம் என அவர் தெரி வித்தார். 

“என்னை நானே பாராட்டிக் கொள்ள விரும்பினேன், ஏனென்றால், இந்த இலக்கை அடைவதற்கு கடுமையாக உழைத்துள்ளேன், உரிய நேரத்தில் எனது ஒப்படைகளைக் கையளிக்க வேண்டும் என்பதற்காக நள்ளிரவு தாண்டியும் அந்த வேலைகளைச் செய் துள்ளேன்.

இரவு நேரக் குளிரிலும் கல்லூரியிலிருந்து பயணித்திருக்கிறேன். அதற்காக என்னை நானே பாராட்டிக் கொள்ள விரும்பினேன். | எனது வகுப்பு நண்பர்கள் விழாவில் என்னுடன் கலந்துகொண்ட எனது மகள் சல்மாவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். எனது மகளைப் பார்த்த எனது வகுப்புத் தோழர்கள் குழந்தை அழகாக இருப்பதாகக் கூறிய தோடு எனது சாயலிலே சல்மா இருப் பதாகவும் தெரிவித்ததாக மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் ஸெய்னப். என்னை நினைத்தும்,

எனது அடைவு குறித்தும் நான் பெருமைப் படுகின்றேன், சென் தோமஸ் பல்க லைக்கழகத்தின் ஆதரவின்றி என்னால் இதனைச் செய்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். தனது மகளுடன் நேரத்தைச் செல் விட சில மாதங்கள் ஓய்வெடுத்துக் கொள்ள உத்தேசித்துள்ள ஸெய்னப் தனது கலாநிதிப் பட்டத்திற்கான . கற்கைநெயினை தொடரத் திட்டமிட் டுள்ளார்.

No comments:

Post a Comment