மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையில் நாளை 02.05.2018ம் திகதி காலை 8.30 மணிக்கு இரண்டாமாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமுக்கு இலங்கையின் சிறந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர் பூ.சிறிகரநாதன் தலைமையிலான குழுவினர் இம்முகாமை நடத்தவுள்ளனர்.
இதில் மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாகவும் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் ரி.யசோதரன் சிறப்பதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.
கண் பரிசோதனை நடத்தப்பட்டு கண் குறைபாடுடைய மாணவர்களுக்கான இலவச மூக்கு கண்ணாடிகளை சிவானந்த விவேகானந்த மாணவர் ஒன்றியத்தின் மூலமாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளது. இவ்வமைப்பினரே இக்கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
கண் சத்திர சத்திர சிகிச்சை நிபுணர் பூ.சிறிகரநாதன் குறிப்பிடுகையில், இவ்வாறான கண் பரிசோதனைகளை இரண்டாமாண்டு மாணவர்களிடம் கண்டறியப்படுமாயின், அவர்களுக்கான சிகிச்சையினை முறைப்படி வழங்குவதன் மூலம் முற்றாகக் குணப்படுத்தி விடலமென்று எட்டு வயதிற்குக் குறைந்தவர்களிடம் கண் நோய்கள் அவதானிக்கப்படுமிடத்து, முறையான மருத்துவ சிகிச்சை மூலம் முற்றாகக் குணப்படுத்த முடியுமெனவும் இவ்வாறு சகல பாடசாலைகளிலும் இரண்டாம், மூன்றாமாண்டு மாணவர்களிடையே இதனை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான கண் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் கண் நோய்களைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமெனக் குறிப்பிட்டார்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஊடகவியலாளர்
No comments:
Post a Comment